நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் ஒரு வாரத்திற்கு நுழைவாயில்களில் தீவிரப் பாதுகாப்புச் சோதனை: குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இன்றிலிருந்து வரும் 14-ஆம் தேதி வரை அனைத்துக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் தீவிரப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 

பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு சோதனைகள் நடத்தப்படுவதாகக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

நிலம், ஆகாயம், கடல் வழி சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் வரும் 11ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிவரை சிங்கப்பூரில் இருப்பார்.

கடந்த வாரம் போப் இந்தோனேசியாவில் இருந்தபோது அவரைத் தாக்க முற்பட்ட 7 சந்தேக நபர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset