நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் சான்றிதழ் குறித்தக் கருத்துத் தெரிவித்த திரேசா கோக்கிடம் நாளை வாக்குமூலம்:  ரஸாருடின் ஹூசேன்

கோலாலம்பூர்:

ஹலால் சான்றிதழ் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் செப்பூத்தே  நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிடம் நாளை காவல்நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அரச மலேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார் தெரிவித்தார். 

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறை நாளை காலை 10.00 மணிக்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்றார் அவர். 

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை (ஜாக்கிம்) பிரதிநிதிகள் உள்ளிட்ட இதர சாட்சிகளும் இந்த விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

திரேசா வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். 

இதர சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவது பின்னர் தீர்மானிக்கப்படும். தேவைப்பட்டால் அழைக்கப் படுவார்கள் என்று அவர் கூறினார்.

ஆட்சியாளர்கள், சமயம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான சீரான செயலாக்க நடைமுறைக் கேற்ப தண்டனைச் சட்டத்தின் 298 மற்றும் 505(பி) பிரிவு, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுவதாக ரஸாருடின் நேற்று கூறியிருந்தார்.

பன்றி இறைச்சி, மதுபானங்கள் சம்பந்தப்படாத உணவகங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் கொண்டிருப்பதைக் கட்டாயப் படுத்தும் பரிந்துரை பரிசீலினையில் உள்ளதாக  ஜாக்கிம் முன்னதாகக் கூறியிருந்தது.

இந்தக் கட்டாய சான்றிதழ் நடைமுறை ஆயிரக்கணக்கான மலாய் வர்த்தகர்கள் உள்பட உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதோடு நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்தும் என்று திரேசா கோக் கூறியிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset