நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோட்டுக்கடை முதல் 99 ஸ்பீட் மார்ட் வரை கவனம் ஈர்க்கும் லீ

கோலாலம்பூர்:

99 ஸ்பீட் மார்ட் உரிமையாளர் லீ போலியோ நோயால் பாதிக்கப்பட்டுச் சக்கர நாற்காலியில் வாழ வேண்டிய நிலைக்கு வந்தார்.

இதன் காரணமாக, அவருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், ரோட்டோரத்தில் ஒரு கடையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

99 ஸ்பீட் மார்ட் ரீட்டெயில் ஹோல்டிங்ஸ் பார்ஹாட், புர்சா மலேசியாவின் பங்கு சந்தையில் புதிதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருத்தமான வாய்ப்புகள் கிடைத்தால் தென்கிழக்காசியாவிற்கும் தமது கிளைகளை விரிவுபடுத்தும் சாத்திய கூறுகளையும் அந்நிறுவனம் மறுக்கவில்லை.

இச்சூழ்நிலையில் 99 ஸ்பீட் மார்ட் நிறுவனத்தில் உரிமையாளர்  லீ பாலியோ குறித்த செய்திகள் வைரலாகி வருகின்றன. பலர் அவர் குறித்து தேடி படிக்கத் தயாராகி வருகின்றார்கள்.

1964 ஆம் ஆண்டு கிள்ளானில், கட்டிட வேலை செய்த தந்தை, சாலையோர விற்பனையாளரான தாயிக்கு பிறந்த லீ, 10 சகோதரர்களுடன் வாழ்ந்தார். அவர்களின் பொருளாதார நிலைமையால் லீ,  ஆறு ஆண்டுகள் மட்டுமே கல்வி பயின்றார்.

சிறுவயதில், பாலியோ நோயால் பாதிக்கப்பட்டு தனது கால்களை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாத நிலை லீக்கு ஏற்பட்டது. 

ரோட்டு கடை வியாபாரத்தை தொடங்கிய லீ,  1987ல் தனது முதல் மளிகைக் கடையைத் திறந்தார். அத்தருணத்தில் அவரது மனைவி, 44 வயதான எங் லீ டியாங், "பசார் மினி 99" என்று அழைக்கப்பட்ட நிறுவனத்தில் கொள்முதல் நிர்வாகியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற காரணத்தினாலும் தொடர் உழைப்பினாலும் இன்று தெற்காசியாவில் முதன்மை நிறுவனமாக 99 ஸ்பீட் மார்ட் உருமாறியுள்ளது.

99SMART என்ற பங்குப் பெயரில் வர்த்தகம் செய்யும் இந்த பங்கு, முதல்நாள் வர்த்தகத்தில் வலிமையான தொடக்கத்தை கண்டது. அதன் ஆரம்ப பொது வழங்கல் (IPO) விலையான RM1.65-ல் இருந்து 12.12% உயர்ந்து RM1.85-க்கு வந்தது, இதன் மூலம் 53.82 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset