நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பாதுகாப்பான பகுதி; மக்கள் அச்சப்பட வேண்டாம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதி பாதுகாப்பாக தான் உள்ளது.

ஆக மக்கள் இங்கு வர அச்சப்பட வேண்டாம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்தார்.

அதே வேளையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தால் இந்த வணிகப் பகுதி பாதுகாப்பானது அல்ல என மக்கள் நினைக்கிறார்.

குறிப்பாக இங்கு வருவதற்கும் மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தில் இருந்து மக்கள் விடுப்பட வேண்டும்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதி மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளது.  மக்களின் பாதுகாப்புக்காக அங்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியில் வர்த்தகம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது என்று அப்பகுதிக்கு வருகை தந்த டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இந்தியர்கள் தான் அதிகமாக வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிட்-19 தொற்றுக்கு பின் இப்போது தான் இப்பகுதியில் வர்த்தகம் மீட்சி பெற்று வருகிறது.

இப்போது இந்த சம்பவத்தால் மக்கள் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் அது நமது வர்த்தகர்களுக்கு தான் பாதிப்பு.

விரைவில் பகுதியில் தீபாவளி சந்தையும் போடப்படவுள்ளது.

ஆகவே மக்கள் வழக்கம் போல் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள வர்த்தகர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset