நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாட்டை துணைப் பிரதமர் தொடக்கி வைப்பார்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மஇகாவின் 78ஆவது  பேராளர் மாநாட்டை 
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வமாக  தொடக்கி வைக்கவுள்ளார்.

கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகாவின் பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை வரை ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 1400 பேராளர்கள் பார்வையாளர்கள் என மொத்தம் 1700க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இம் மாநாட்டில் கொள்கை உரையாற்றவுள்ளார்.

மேலும் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

இம்மாநாட்டில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

மாநில பேரவைகள் போன்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவு வழங்குவது முதல் தீர்மானமாகும்.

நாட்டில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து பேசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆனால்  இந்து மதம் தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை.

ஆகையால் அரசாங்கம் எல்லாம் மதத்தினருக்கும் முன்னுரினமை வழங்க வேண்டும்  என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட உள்ளது.

அதேவேளையில் கட்சியின் எதிர்கால சவால்கள், திட்டங்கள் குறித்தும் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset