நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின் வாகனங்கள் உட்பட அனைத்துப் புதிய ஜீரோ-எமிஷன் வாகனங்களும் JPJePlate-யைப் பயன்படுத்த வேண்டும்: அந்தோனி லோக் 

சைபர் ஜெயா: 

மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து புதிய ஜீரோ-எமிஷன் வாகனங்களும் (ZEVs) விரைவில் சாலைப் போக்குவரத்துத் துறையின் JPJePlate ஐப் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

சாலையில் இருக்கும் ZEV-களுக்கு JPJePlate கட்டாயமில்லை, ஆனால் அவற்றின் உரிமையாளர்கள் மாற ஆர்வமாக இருந்தால் நவம்பர் முதல் வாகன எண் பட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதையும் லோக் உறுதிப்படுத்தினார்.

வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இன்று முதல் jpjeplate.jpj.gov.my மூலம் புதிய ZEV வாகனங்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் சார்பாக JPJePlates-க்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

புதிய ZEV களுக்கு JPJePlate இன் சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

இம்முயற்சி குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் போக்குவரத்து அமைச்சகம் வரவேற்கிறது.

JPJePlate-இன் முன், பின் எண் பட்டைகள், RFID windshield sticker ஆகியவை அனைத்தும்  RM98 வெள்ளியாகும். 

இன்று புதிய ZEVகளுக்கான JPJePlate சிறப்பு வடிவமைப்பை செயல்படுத்துவது, ZEV களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், இலக்கவியல் மயமாக்கல் முயற்சிகளைத் தொடரவும் கூடுதல் சலுகைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் இரட்டை உத்தி முயற்சியாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset