நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்தியில் அம்னோ அரசாங்க வழிநடத்துநராக இருக்க வேண்டும்: அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சலே கோரிக்கை 

கோலாலம்பூர்: 

அம்னோ கட்சி மத்திய அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும். அதற்காக அம்னோ கடுமையாக உழைக்க வேன்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சலே கூறினார். 

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் அம்னோ, மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

தற்போது அம்னோவைச் சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் அது அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தேசிய அரசியல் அரங்கில் அம்னோ வலிமைமிக்க கட்சியாக உருமாற்றம் அடைய வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவின் தேசிய பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் 

அம்னோ கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஆகஸ்ட் 21 முதல் 24ஆம் தேதி வரை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும் என்று அட்டவணையிடப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset