
செய்திகள் மலேசியா
தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா: ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது
ஜார்ஜ்டவுன்:
தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகச்சிக்கு பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜூ மற்றும் பினாங்கு மாநில கல்வி இலாகாவின் இயக்குநர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் LPS ஆகிய தரப்பினர்களின் ஏற்பாட்டில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழா நடைபெறுகிறது.
தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி 1973ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. கல்வியில் சிறந்து விளங்கி பல மாணவர்கள் சிறந்த நிலையில் உள்ளனர்.
50ஆவது பொன்விழா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உணவு மேசைக்கான முன்பதிவுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
மேல் விபரங்களுக்கு, T பூவனேஸ்வரன் 016-322 7151, P. யுவராஜன் 016-508 2761 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm