
செய்திகள் மலேசியா
மின்னியல் விளம்பர பலகையில் பிறந்தநாள் வாழ்த்து: காதலிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்
கோலாலம்பூர்:
தனது காதலிக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை வேறு விதமாக தெரிவிக்கும் விதமாக இளைஞர் ஒருவர் மின்னியல் விளம்பர பலகையில் காதலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள LED மின்னியல் விளம்பர பலகைகளை வாடகைக்கு எடுத்து தமது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவ்விளைஞரின் செயல் டிக்டாக்கில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்டு வைரலானது
தனது சகோதரிகள், நண்பர்களுடன் வந்த அந்த காதலி, இளைஞரின் இந்த செயலினால் இன்ப அதிர்ச்சி அடைந்து மெய்மறந்து நின்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am