நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்கதேசம் மாணவர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பால் பதற்றம்

டாக்கா:

வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் குழுத் தலைவர்கள் அரசுடனான  பேச்சுவார்த்தையை நிராகரித்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டதை தீவிரப்படுத்தப்படும் என்றும் இதற்காக அரசு இயந்திரம் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.

Protests and violence break out again in Bangladesh amid calls for the  government's resignation | KTVE - myarklamiss.com

ஷேக் ஹசீனா பதவி விலகுவதை வலியுறுத்தி மாணவர்கள் குழுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset