நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்:

அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயலினால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

குறிப்பாக தெற்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு டெக்சாஸிலிருந்து லூசியானா, மிசிசிப்பி வழியாக டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லி வரை கடும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 175 மில்லியன் மக்கள் கடும் குளிர் எச்சரிக்கையில் உள்ளனர். கிழக்கு கரையில் வார இறுதியில் மேலும் ஒரு புயல் தாக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset