நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி

பாங்காக்:

அதிகரித்து வரும் காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தாய்லாந்து முதன்முறையாகக் காட்டு யானைகளுக்குக் கருத்தடை  தடுப்பூசி (வாக்சின்) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள டிராட் (Trat) மாகாணத்தில், மூன்று பெண் காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகளும் கால்நடை மருத்துவக் குழுவும் இந்த ஊசியைச் செலுத்தியதாக, வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக இயக்குநர் சுகீ பூன்சாங் (Sukhee Boonsang) தெரிவித்தார்.

காட்டு யானைகளின் பிறப்பு விகிதத்தை  நிர்வகிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் AFP-க்கு கூறினார். தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஐந்து மாகாணங்களில் யானைகளின் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு சுமார் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது பிற பகுதிகளில் உள்ள 3 சதவீத வளர்ச்சியைவிட அதிகமாக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

“இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் மனிதர்கள் யானைகளால் தாக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

 மயக்க மருந்து இல்லாமல் டார்ட் துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்நடை மருத்துவர்களும் அதிகாரிகளும்  இந்த வாரம் தடுப்பூசியைச் செலுத்தினர் என்று வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

தாய்லாந்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 2015-ல் 334 ஆக இருந்தது; அது 2025-க்குள் சுமார் 800 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ஆயிரக்கணக்கான யானைகள் சிறைப்பிடிப்பிலும் உள்ளன.

2012 முதல் காட்டு யானைகள் தாக்கியதில் சுமார் 200 மனிதர்களும், 100-க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தேசிய விலங்கான ஆசிய யானை, உலகளவில் அழிவின் அச்சுறுத்தலில் உள்ள இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset