செய்திகள் உலகம்
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியா:
வெனிசுவேலா எல்லை அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில், கொலம்பியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
போகோடா அதிகாரிகள் தெரிவிப்பதாவது: பீச் கிராஃப்ட் 1900 வகை விமானத்தில் 13 பயணிகளும், இரண்டு விமானப் பணியாளர்களும் பயணித்ததாகப் போகோடா அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் ஒகானா நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட விமானம் எல்லை நகரமான குகுடாவில் இருந்து புறப்பட்டது. ஆனால், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது.
அந்த விமானம் கொலம்பிய அரசுக்கு சொந்தமான ‘சடீனா’ (Satena) விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகவும், பயண நேரம் 23 நிமிடங்களாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து ஏற்பட்ட பகுதி கிழக்கு ஆண்டிஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள மலைப்பாங்கான, அடர்ந்த காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், அங்கு சீரற்ற வானிலை நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தேடுதல், மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கொலம்பிய வான்படை அனுப்பப்பட்டது.
மேலும், விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சில கிராமப்புற பகுதிகள், கொலம்பியாவின் மிகப்பெரிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை படை (ELN) கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுவரை ஏழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று நோர்தே டி சாண்டாண்டர் மாநில ஆளுநர் வில்லியம் வில்லாமிசார் கூறினார்.
உயிரிழந்தவர்களில், கொலம்பியா நாடாளுமன்றத்தின் உறுப்பினரான டயோஜென்ஸ் குயின்டேரோ (36) மற்றும் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருந்த கார்லோஸ் சல்சேடோ ஆகியோரும் அடங்குவர்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:41 pm
நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்
January 30, 2026, 4:36 pm
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
