நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கு: முஸ்லிம்களின் மனு தள்ளுபடி

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாயி ஈத்கா பள்ளிவாசலை இந்துக்கள் கோரும் வழக்கில் முஸ்லிம்களின் மனுக்களை தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்ம பூமி இடத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்கள் நம்புகின்றனர். அங்கிருந்த பழமையான கிருஷ்ணர் கோயிலை இடித்து ஷாயி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறி, அங்கு பள்ளிவாசல் உள்ள இடத்தை கோயிலிடம் திரும்ப ஒப்படைக்கும்படி 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் ஷாயி ஈத்கா பள்ளிவாசல் எதிர்மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மயாங் குமார் ஜெயின் விசாரித்து முஸ்லிம்கள் தரப்பில் தடை கோரி தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

ஆர்யன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset