நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

டத்தோஸ்ரீ மோனா ஓங் கிண்ண புகைப்படப் போட்டி

கோலாலம்பூர்:

ஜீபா எனப்படும் ஜொகூர் இந்தியர் வர்த்தகச் சங்கமும் கோல்டன் எம்பாயர் குழுமமும் ஒன்றிணைந்து நடத்தும் டத்தோஸ்ரீ மோனா ஓங் (ஜீபா புரவலர்) கிண்ண புகைப்படப் போட்டிக்கு பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.

நாட்டில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் இந்தக் கலை மீதான ஆர்வத்தை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தப் போட்டி நடத்தப்படுவதாக அதனை வழிநடத்தும் மகேந்திரன் தெரிவித்தார்.

ஏற்கெனவே புகைப்படக் கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

அதில் பங்கேற்றவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வர். அதேபோல் மற்றவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். 

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்யும் இறுதி நாள் இம்மாதம் (ஆகஸ்ட்) 31ஆம் தேதியாகும். அதிலும் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது. 

இதில் முதல் நிலையில் வெற்றி பெறுவோருக்கு வெற்றிக்  கிண்ணத்தோடு 3 ஆயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்படும். அதேபோல் 2ஆம் நிலைப் பரிசாக வெற்றிக் கிண்ணம், 2 ஆயிரம் ரிங்கிட்ரொக்கத்தொகை வழங்கப்படும்.

தொடர்ந்து 3ஆம் நிலை வெற்றியாளருக்கு ஆயிரம் ரிங்கிட் தொகையோடு வெற்றிக் கிண்ணம் வழங்கப்படுவதோடு கிண்ணமும் 300 ரிங்கிட் ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என்றார் அவர்.

இந்தப் புகைப்படப் போட்டியின் பரிசளிப்பு விழா வரும் செப்டம்பர் 14ஆம் தேதி செனாயில் உள்ள இம்பியானா ஹோட்டலில் மாலை 6.30 மணி தொடக்கி  நடைபெறுகிறது. 

அதில் ஜீபா தலைவர் சிவகுமார் பக்கிரிசாமி, ஜீபா புரவலர் டத்தோஸ்ரீ மோகனாம்பாள் ஓங் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பர் என மகேந்திரன் கூறினார். மேல் விவரங்களுக்கு: 016-8140083 (மகேந்திரன்).

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset