
செய்திகள் மலேசியா
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்கப் போட்டிகள்
கோலாலம்பூர்:
கெபிமாவின் 23ஆம் ஆண்டு தேசிய அளவிலான மார்க்க நிகழ்ச்சிகளின்வழி போட்டிகள் நடத்த மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தலைநகர் ஜாலான் டூத்தா மஸ்ஜித் விலாயாவில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளின் இயக்கமான கெபிமாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, ஜாக்கிம் உட்பட பலரின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்திய முஸ்லிம் மாணவ மாணவிகள் மார்க்கக் கல்வி மேம்பாட்டிற்கும் தங்களிடம் இருக்கும் தனிச் சிறப்புகளை தன்னம்பிக்கை, ஆற்றலைகளையும் வெளிக் கொணர இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள மதராஸா மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். திருக்குர்ஆன் சரியான உச்சரிப்புடன் ஓதுதல், நஷீத் பாடல்கள், பாங்கு சொல்லுதல், மார்க்க வினாடி வினா என்று பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 22 ஆண்டு காலமாக நடத்திவரும் கேபிமா அமைப்பு இந்த 23 ஆம் ஆண்டிலும் வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தோற்றுநரும் ஆலோசகருமான முஹம்மது பின் காதர் அலி நம்பிக்கையிடம் கூறினார்.
ஆகவே அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்வுக்கு ஆதரவு தருமாறு கெபிமாவின் நிறுவனரும், ஆலோசகருமான முஹம்மது பின் அப்துல் காதிர் அலி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am