
செய்திகள் உலகம்
சிங்கப்பூர்வாழ் இந்திய முஸ்லிம்கள் குறித்து ஓர் இணைய தளம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் முதல் Micro site on singapore Indian Muslim அரசியல் ,இலக்கியம் , கலை, பண்பாடு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று தகவல் தொகுப்பு படங்களுடனும் நேர்த்தியான வடிவமைப்பில் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைப்புகள், சங்கங்கள், ஆளுமைகளை தொடர்புபடுத்தி இதனை அருமையாக உருவாக்கி இருக்கிறார்கள். 111 பகுப்பாய்வுகளில் 58 தனி நபர்கள் ,30 அமைப்புக்கள் பற்றிய குறிப்புகளுடன் 705 இணையத் தொகுப்புக்கள்வழி இது உருவாக்கப்பட்டுள்ளது .
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பட்டாதாரிகள் சங்கம் சமூகப் பங்களிப்பாக சிங்கப்பூர் தமிழ் பண்பாட்டு மைய ஆதரவுடன் உருவாக்கியுள்ள இந்த இணைய தளம் திருத்தப்படவும் பங்களிக்கப்படவும் வாய்ப்புள்ள வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது .
குழுவின் பார்வைக்குப் பின் புதிய பக்கங்களோ திருத்தங்களோ வலையேற்றம் செய்யும் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளம் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் அறிவியக்கவாதிகளின் ஒரு கூட்டுச்செயல்பாடாக வளர்த்தெடுக்க்கும் முன் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது அந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது.
இந்திய முஸ்லிம்களின் பாரிய வரலாற்றை கொண்ட மலேசியாவில் இதுவரை இத்தகைய ஏற்பாடு இன்னும் செய்யப்படாத சூழலில் சிங்கப்பூரர்கள் இதனை முன்னெடுத்துள்ளார்கள்.
https://singapore-indian-muslims.glide.page/dl/d0a5f4
இந்த அகப்பக்கத்தில் சிங்கப்பூர் முஸ்லிம்கள் குறித்து பார்வையிடலாம்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am