நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

200 இந்திய மாணவர்கள் திவேட் கல்வி பயில சீனாவுக்கு அனுப்பப்படுவர்: ஜாஹித் ஹமிடி 

பாகான் டத்தோ:

மலேசியாவில் இருந்து 200 இந்திய மாணவர்கள் திவேட் கல்வி பயில சீனாவுக்கு அனுப்பப்படுவர். 

துணைப் பிரதமரும் திவேட் மன்றத் தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இதனை தெரிவித்தார்.

சீனாவில் திவேட் எனப்படும் தொழில்நுட்பம், தொழிற்கல்வி, பயிற்சி கல்விக்காக முதல் கட்டமாக 200 இந்திய மாணவர்களை அரசாங்கம் அனுப்பும்.

இதன் இலக்கு வெற்றியடைந்தால், மேலும் 200 இந்திய மாணவர்கள் இதே திட்டத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

கல்வி விஷயத்தில், இந்தியராக இருந்தாலும் சரி, மலாய்க்காரர்களாக இருந்தாலும் சரி, சீனர்களாக இருந்தாலும் சரி, அனைத்து இனத்தினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இந்திய மாணவர்களை சீனாவில் இலவசமாக திவேட் கல்வி  படிக்க அனுப்புவோம்.

அவர்கள் வெற்றி பெற்று நாடு திரும்பியதும், மேலும் 200 பேரை அங்கு அனுப்ப முயற்சிப்பேன்.

பாகன் டத்தோ நாடாளுமன்றத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset