
செய்திகள் மலேசியா
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவியை ஏற்க டத்தோஸ்ரீ ரமணனே சரியான தேர்வாக இருப்பார்: அஹ்மத் ஃபாட்லி
கோலாலம்பூர்:
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவியை ஏற்க டத்தோஸ்ரீ ரமணனே சரியான தேர்வாக இருப்பார்.
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி இதனை கூறினார்.
கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரபிசி ரம்லி தோல்வி கண்டார்.
இதைத் தொடர்ந்து ரபிசி பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போன்று இயற்கைவளம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து நிக் நஸ்மியும் விலகினார்.
இதனல் மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் இடம் காலியாகி உள்ளது.
காலியாகியிருக்கும் அவ்விரு பொறுப்புகளுக்கு விரைந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
ஆகையால் ரபிசியின் இடத்தை நிரப்ப டத்தோஸ்ரீ ரமணன் சிறந்த தேர்வாக இருப்பார்.
சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.
இதனாம் தாம் அப்பரிந்துரையை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக அண்மையில் நடைபெற்று முடிந்த கெஅடிலான் கட்சித் தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு டத்தோஸ்ரீ ரமணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத்தனர்
May 29, 2025, 1:12 pm