
செய்திகள் மலேசியா
உலகின் தலைசிறந்த மருத்துவச் சுற்றுலா மையமாக மலேசியா தேர்வு
கோலாலம்பூர்:
மருத்துவ சுற்றுலா மேற்கொள்வோரின் தேர்வுக்குரிய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், துருக்கி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை மிஞ்சி மலேசியா தற்போது முதலிடத்தில் உள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனமான Nomad Capitalist வழங்கிய இந்த அங்கீகாரம், மலேசியாவின் மருத்துவ நிபுணத்துவம் மீது அனைத்துலக சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை புலப்படுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தனது முகநூல் பக்கத்தில் கூறினார்.
மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் நிபுணத்துவம், உயர்தர சுகாதாரப் பராமரிப்பு, நவீன சிகிச்சை, நட்புறவானச் சேவை, மலேசிய சமூகத்தின் உன்னத மதிப்புகள் ஆகியவற்றின் தனித்துவங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அவர்கள் மலேசியாவிற்கு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்..
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 13 லட்சம் மருத்துவ சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததன் மூலம் மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை 200 கோடி வெள்ளிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியது என்று மேலும் கூறினார்.
சுகாதார சுற்றுலாவை மேம்படுத்த முயன்று வரும் மலேசிய சுகாதார சுற்றுலா மன்றத்தின் கடின உழைப்பையும் அவர் பாராட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am