
செய்திகள் மலேசியா
LGBTQ கலாச்சாரத்தை இயல்பாக்கும் முயற்சிகளை அரசாங்கம் நிராகரிக்கிறது: நயிம் மொக்தார்
கோலாலம்பூர்:
LGBTQ கலாச்சாரத்தை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ இயல்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் நிராகரிக்கிறது என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் கூறினார்.
இந்தக் கலாச்சார முறைகளை இயல்பாக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்கக் கொள்கைக்கு முரணானது என்று அவர் கூறினார்.
LGBTQ கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ‘Pride Care: Queer Stories & Sexual Health Awareness’, என்ற நிகழ்ச்சி தொடர்பான காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மறைமுகமாக நடத்தப்படுவதால் சமூக விதிமுறைகள் மற்றும் மத விழுமியங்களுக்கு சவாலாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக அரச மலேசிய காவல்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சட்ட மீறல் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தின் சட்டம் மற்றும் தார்மீக விழுமியங்களை மீறும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அவர் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am