நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுப்பில் உள்ள அமைச்சர்களை மாற்ற முடியாது: பிரதமர்

கோலாலம்பூர்:

விடுப்பில் உள்ள அமைச்சர்களை எங்களால் மாற்ற முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதுவரை அமைச்சரவை மாற்றம் எதுவும் திட்டமிடப்படவில்லை.

தற்போதைய பிரதமரின் கூற்றுப்படி, ரபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அகமது இன்னும் விடுப்பில் உள்ளனர்.

அவர்கள் விடுப்பில் இருக்கும்போது நாங்கள் அவர்களை மாற்ற முடியாது.

இன்று காலை புத்ராஜெயா நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தின் போது பிரதமர் இதனை கூறினார்.

முன்னதாக பொருளாதார அமைச்சரான ரபிஸி நேற்று தனது ராஜினாமாவை சமர்ப்பித்து ஜூன் 16 வரை விடுப்பில் உள்ளார். 

அவரின் ராஜினாமா ஜூன் 17 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

அதே போன்று நிக் நஸ்மி வரும் ஜூலை 3ஆம் தேதி வரை விடுப்பில் உள்ளார். மேலும் அமைச்சராக அவரது கடைசி தேதி ஜூலை 4 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset