நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு

புது டெல்லி: 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்கள்  புறக்கணித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் கோரிக்கை வைக்கப்படும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 5 நிமிடங்களுக்கு மேல் நிதி ஆயோக் கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்பட வில்லை என்று கூறி மம்தா வெளிநடப்பு செய்தார்.

இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் கர்நாடகம்,  ஹிமாசல பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களான சித்தராமையா, சுக்விந்தர் சிங் சுக்கு, ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset