நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புது டெல்லி:

உத்தர பிரதேச பாஜக அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளி என்பதற்காக ஒருவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது, மேலும், புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள், பாலியல், முறைகேடு, மோசடி, குண்டர் குற்றச்சாட்டுகளில் சிக்கிபவர்கள் ஆகியோரின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் உத்தர பிரதேச அரசு இடித்து வருகிறது.

இதை பாஜக ஆளும்மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்  அரசுகளும்  பின்பற்றி வருகின்றன.

இதற்கு எதிராக ஜாமியாத் உலாமா ஹிந்த் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, தில்லி ஜஹாங்கீர்புரியில் உள்ள போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

குடியிருப்புவாசிகளுக்கு உரிய முன்னறிவுப்புகள் எதுவும் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், குற்ற வழக்கில் தொடர்புடையவர் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இது தொடர்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வகுக்கும் என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset