
செய்திகள் இந்தியா
வக்பு சட்டத் திருத்தகூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான கேள்விகள் எழுப்பினர்: பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
புது டெல்லி:
வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் எதிக்ர்கட்சி எம்.பி.க்கள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
மாநிலங்கள் முழுவதும் செயல்படும் வக்பு வாரியங்களின் நிலங்களின் உரிமையை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்று ஒன்றிய அரசு ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து, ரயில்வே அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது தில்லியை சுற்றியுள்ள இந்த அமைச்சகங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடங்களில் உள்ள வக்பு சொத்துகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த வக்பு சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒரு சொத்து வக்ஃப் சொத்து என்று தவறாக அறிவிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடுக்க ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது என வாதிட்டனர்.
மேலும், சுயசிந்தனையில்லாமல் ஒன்றிய அமைச்சகங்கள் ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்தை அங்கீகரிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இதனால் ஆளும் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான திரிணமூல், ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 1911ம் ஆண்டு தில்லியை கட்டமைக்க ஆங்கிலேய அரசு எவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது என்பது குறித்து ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
அப்போது கூட்டுக் குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm