நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது

அன்காரா:

இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியில் அவசரமாகத் தரையிறங்கக் காரணமான வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று துருக்கி ஆளுநர் கூறினார்.

இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 6-ஆம் தேதி நிகழ்ந்தது.

"விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" என்ற ஒரு குறிப்பு கழிவறையில் காணப்பட்டது.

வெடிகுண்டு அகற்றும் பிரிவு விமானத்தைத் தேடி பயணிகளை வெளியேற்றியது.

234 பயணிகளும் 13 சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர்.

இந்தியா மும்பையிலிருந்து ஜெர்மனியின் Frankfurt-க்கு விமானம் சென்று கொண்டிருந்தது.

வெடிக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து துருக்கியின் Erzurum விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset