நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வினேஷ் போகட், பட்ரங் புனியா தேர்தலில் போட்டியிட தயாராகின்றனர்

புது டெல்லி:

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ஆகியோர் ஹரியாணா தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவர்கள் தில்லியில் சந்தித்தனர்.

கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை கோரி நடந்த போராட்டத்தில் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரும் இருந்தனர்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரை முறையே ஜுலனா, பத்லி ஆகிய தொகுதிகளில் களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை இறுதி செய்வதற்காக ராகுல் காந்தியை இருவரும் சந்தித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றவரான மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், போட்டி நிர்வாகத்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset