நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமான தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி 

புது டெல்லி:

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிறதா என ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2020 இல் கேரளத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக உடைமையில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடி சம்பவம் குறித்து என்ஐஏ, ஈடி, சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், தூதரக உடைமைகளை சோதனை செய்ய முடியுமா அல்லது சோதனையிலிருந்து தூதரக உடைமைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது 3 வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset