செய்திகள் இந்தியா
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் பேரவைத் தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை அவர் தொடங்கினார்.
அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் பெருநிறுவன முதலாளி நண்பர்களான அதானி மற்றும் அம்பானி ஆகிய 4 பேர்தான் ஆட்சியை வழிநடத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், அதில் விருப்பமில்லாத பாஜக, முதலில் தேர்தலை நடத்தி முடிக்க எண்ணியது.
பாஜக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்பக் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
