நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது: மஇகா மகளிர் அணி வேதனை

கோலாலம்பூர்:

நாட்டில் டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில்  பாதிக்கிறது.

மஇகா தேசிய மகளிர் பிரிவில் தலைவரும் கெமேலே சட்டமன்ற உறுப்பினருமான  சரஸ்வதி நல்லதம்பி இதனை தெரிவித்தார்.

இணையப் பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.  ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி தற்கொலை போல் இன்னொரு சம்பவம் நம் நாட்டில் நிகழக்கூடாது.

அதே நேரத்தில் இணையப் பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேலவையில் செனட்டர் டத்தோ நெல்சன் வலியுறுத்த கோரி ம இகா மகளிர் அணி மகஜரை வழங்கும் என்று அவர் கூறினார்.

மேலும் தற்போது நாட்டில் டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இது பெரும் வேதனையை அளிக்கிறது என்று இன்று மஇகா மகளிர் அணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

இதனிடையே ம இகா தேசிய மகளிர் அணி சமூகப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறது.

நியமனம் செய்யப்பட்ட மாநில மஇகா மகளிர் அணி பொறுப்பாளர்கள் தத்தம் கடமைகளை சரிவர செய்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset