நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆண்டு முதல் 1,869 காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அயூப் கான்

பாங்கி: 

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் 1,869 காவல்துறை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக அரச மலேசியக் காவல்படையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 631 காவல்துறை உறுப்பினர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 36 பேர் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். 

கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,238 காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 139 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

எந்த அதிகாரிகளையும் அல்லது உறுப்பினர்கள் தவறான நடத்தையில் ஈடுபடுவதை அரச மலேசியக் காவல்படை பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். 

மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுதல், சிண்டிகேட்டுகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஊழலுக்கு எதிரான உறுதிமொழிகள் உட்பட இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதையும் அயூப் கான் உறுதிப்படுத்தினார். 

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஆகிய இரு துறைகளுடன் இணைந்து காவல்துறை பணியாற்றி வருவதாக அயோப் கூறினார்.

சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்களை கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset