நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன, இந்திய இளையோரிடையே பாகுபாட்டு உணர்வு அதிகரிப்பு: மெர்டேக்கா இளையோர் ஆய்வு

கோலாலம்பூர்:

மெர்டேக்கா மையத்தின் இளையர் ஆய்வு 2024ன் படி, ஆய்வில் பங்கேற்ற சீனர்கள், இந்தியர்களில் 58 விழுக்காட்டினர் தங்கள் சமூகங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்த விகிதம் கடந்த ஆண்டில் 43 விழுக்காடாக இருந்தது.

மலேசியாவில் நடந்து வரும் இனவாத இயக்கவியல், குறிப்பாக இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, மலாய்க்காரர்களிடையே உள்ள இனங்களுக்கு இடையேயான அவநம்பிக்கை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை ஆய்வு வெளிப்படுத்தியது.

இந்த சமூகப் பிரச்சினைகளில் மலேசிய இளையர்கள் முன்னணியில் இருப்பதால், இந்த கண்டுபிடிப்புகள், இனங்களுக்கிடையிலான புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய சமூகத்தினர் மலேசிய சமூகத்திற்குள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 

62 விழுக்காட்டு இந்தியர்கள் தாங்கள் பாகுபாடு காட்டப்படுவதாகவும் தெரிவித்தனர். 

28 விழுக்காட்டினர் மட்டுமே நியாயமாக நடத்தப்படுவதாகக் கூறினர்.

மெர்டேக்கா மையத்தின் இணை நிறுவனர் மற்றும் நிகழ்ச்சிகள் இயக்குநர் இப்ராஹிம் சுஃபியான் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset