நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்ட பகுதியின் புவி தொழில்நுட்ப அறிக்கை 3 மாதங்களில் தயார் செய்யப்படும்: இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் 

கோலாலம்பூர்: 

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்ட பகுதி குறித்த புவி தொழில்நுட்ப அறிக்கை மூன்று மாதங்களில் தயாராகிவிடும் என்று இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மாநகர மன்ற தலைமையிலான மஸ்ஜித் இந்தியா மண் கட்டமைப்பு பணிக்குழு இந்த அறிக்கையை தயார் செய்து வருவதாக வருகிறது என்று இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 

மனித நடவடிக்கைகள், வானிலை மற்றும் நிலத்தடி மண் அரிப்பு போன்ற பல காரணிகளால் இந்த நில அமிழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வு விசாரணையில் கண்டறியப்பட்டது.

புவியியல் ரீதியாக, கோலாலம்பூரிலுள்ள பாறைகள் சுமார் 30% சுண்ணாம்புக் கற்கள், 70% கிரானைட், கென்னி ஹில் ஃபார்மேஷன், ஹாவ்தோர்ன்டன் ஷிஸ்ட் மற்றும் டிண்டிங் ஷிஸ்ட் உள்ளிட்ட மெட்டாசெடிமென்டரி பாறைகளைக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் கூறியது.

நில அமிழ்வு ஏற்பட்ட பகுதி முதன்மையாக ஸ்கிஸ்ட், ஃபைலைட் மற்றும் கென்னி ஹில் ஃபார்மேஷனின் குவார்ட்சைட் ஆகியவற்றால் அடிக் கோடிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் பாதுகாப்பான பகுதியாக இருந்தாலும் நில அமிழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் இந்தியா ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான விஜயலெட்சுமி புதையுண்டார். 

விஜயலெட்சுமியைத் தேடும் பணி ஒன்பதாம் தேதி நிறுத்தப்பட்டது.

தேடுதல் குழுவின் பாதுகாப்பு காரணமாக தேடுதலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset