நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தோனேசியா உறுதியாக உள்ளது

கோலாலம்பூர்:

மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தோனேசியா உறுதியாக உள்ளது.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் பிரபோவோ சுபியான்டோ ஓர் அறிக்கையின் வாயிலாக இதை தெரிவித்தார்.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் பிரபோவோ சுபியான்டோ மரியாதை நிமித்தமாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் மலேசியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, நீடித்த உறவுகள் நிலைத்து வருகிறது.

இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பாராட்டுகிறேன்.

குறிப்பாக பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset