நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் மரியாதை அடங்கியுள்ளது: மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காஸி

குளுவாங்:

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் கண்ணியமும் மரியாதையும் அடங்கியுள்ளது.

ஆகையால் இந்த தேர்தலை மிகவும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி கூறினார்.

ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி பிரதிநிதித்து வேட்பாளர் களமிறங்க உள்ளார்.

இதன் அடிப்படையில் தேர்தல் இயக்குநராக என்னை நியமித்துள்ளனர். இப் பொறுப்பை ஏற்பதில் நான் அச்சம் காட்டினேன். இருப்பினும் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டேன் 

காரணம் இத் தேர்தலில் தேசிய முன்னணியின் கண்ணியமும் மரியாதையும் அடங்கியுள்ளது.

ஆகையால் இந்த தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.

அதற்காக தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரம் கடுமையாக உழைக்க வேண்டும்.

குறிப்பாக தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளும் தோழமை கட்சிகளும் இத்தேர்தலில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இம்முறை நம்பிக்கை கூட்டணியும் நமக்கு ஆதரவாக உள்ளது.

ஆக இத்தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று டத்தோ ஓன் ஹபிஸ் காஸி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset