நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் ஹுசைன் தேசிய முன்னணி வேட்பாளர் மட்டும் அல்ல; ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்: ஜாஹித் ஹமிடி

குளுவாங்:

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் சைட் ஹுசைன் தேசிய முன்னணி வேட்பாளர் மட்டும் அல்ல.

மாறாக ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் என்று தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு பரவலாக மேற்கொள்ளப்பட்டது.

அம்னோ, அதன் மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளில் இருந்து  மொத்தம் 17 வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

தேர்வு செய்யப்படும் வேட்பாளரால் வெற்றி பெற முடியுமா, மக்கோத்தா வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா என்பதை அடிப்படையாக கொண்டே தேர்வு நடத்தப்பட்டது.

இறுதியில் குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹுசைன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சைட் ஹுசைன் தேசிய முன்னனி வேட்பாளர் மட்டும் அல்ல. மாறாக அவர் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராவார்.

ஆகையால் அவரின் வெற்றியை உறுதி செய்ய ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளும் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்.

இதுவே அனைவரின் இலக்காக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset