நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில போலிஸ்படைத் தலைவர் குமார் டத்தோ விருது பெற்றார்

கோலாலம்பூர்:

ஜொகூர் மாநில போலிஸ்படைத் தலைவர் குமார் டத்தோ விருது பெற்றார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து அவர் இவ்விருதை பெற்றார். 

மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு விருதளிப்பு விழா இன்று அரண்மனையில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 116 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர் முன்னிலை வகிக்கிறார். 

அவருக்கு பிஎம்என் எனப்படும் டர்ஜா பங்லிமா பங்கு நெகாரா (டான்ஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.

ராணுவ படைகளின் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முஹம்மது அப்துர் ரஹ்மான, தேசிய போலிஸ் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் ஆகியோரும் இந்த பிஎம்என் விருது வழங்கப்பட்டது.

5 பேர் பிஎஸ்எம் எனப்படும் டர்ஜா பங்லிமா செத்தியா மக்கோத்தா (டான்ஸ்ரீ) விருது பெற்றனர்.

தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அஹ்மத் தெரிரூடின், பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அஹ்மத் டஹ்லான், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ ஹர்மிண்டர், மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹமிடின் உட்பட பலர் டான்ஸ்ரீ விருதை பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset