நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்

கோலாலம்பூர்: 

நேற்றிரவு காலமான முன்னாள் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் Tan Sri Dr Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்தினருக்கு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடுமையான சூழலை எதிர்கொள்ள Zaharah Sulaiman-னின் குடும்பத்தினருக்கு வலிமையும் பொறுமையும் இறைவன் வழங்குவான் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான ஜாஹித் ஹமிடி தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சரும் அம்னோ மகளிர் பிரிவின் முன்னாள் தலைவருமான Siti Zaharah Sulaiman காலமானார். அவருக்கு வயது 75.

இதனை மாரான் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான ஷஹானிசா சம்சுதீன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 1999 முதல் மார்ச் 2004 வரை தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டு அமைச்சராக அவர் பணியாற்றினார். அதோடு 1996க்கும்1999 க்கு இடையில் பிரதமரின் துறை அமைச்சராகவும் சித்தி ஜஹாரா பொறுப்பேற்றிருந்தார்.

இதனிடடையே 1996ஆம் ஆண்டு நடந்த அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு ரபிதா அஜீஸை தோற்கடித்து, அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார்.

4 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்த அவர், மீண்டும் அதனைத் தற்காப்பதில் ரஃபிடாவிடம் தோல்வியைத் தழுவினார்.

தமது அரசியல் வரலாற்றில் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக சித்தி ஜஹாரா சேவையாற்றியுள்ளார்.

மெந்தகாப் நாடாளுமன்றத் தொகுதியில் 1986 முதல் 1995 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். 1995 முதல் 2008ஆம் ஆண்டு வரை பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset