நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் போதுமான பலத்துடன் இல்லை: டெங் ஹெக்

லண்டன்: 

புதிய பருவத்தில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்ய இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான மென்செஸ்டர் யுனைடெட், மேலும் பலமான ஆட்டக்காரர்களை அடையாளம் காண வேண்டுமென அதன் நிர்வாகி எரிக் டெங் ஹெக் நம்புகின்றார்.

கடந்த பருவத்தில் ஆட்டக்காரர்கள் காயம் அடைந்ததால், மென்செஸ்டர் யுனைடெட் அணி அனைத்து நிலைகளிலும் பின்னடைவைச் சந்தித்தது.

முன்னணி ஆட்டகாரர்களில் பலர் காயம் காரணமாக விளையாடவில்லை.

இப்பருவத்தில் இதுவரையில் லில்லி பிரான்ஸ் லில் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் பேக் - லெனி யோரோவை 59 மில்லியன் பவும் தொகையில் ஒப்பந்தம் செய்தது.

அதோடு இத்தாலி போலொங்னாவின் தாக்குதல் ஆட்டக்காரரான ஜோசுவா ஜிர்க்ஸீயை 36.6 மில்லியன் பவுன் தொகையில் அணியில் இணைந்து கொண்டுள்ளது.

போதுமான ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணி அடுத்த பருவத்தில் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்ய முடியும்.

அதற்கான ஆளுமையை நம்மோடு இருக்கின்றார்கள் என எரிக் டெங் ஹெக் கூறினார்.

இருப்பினும் கடந்த பருவத்தில் அதிகமான ஆட்டக்காரர்கள் காயம் அடைந்ததால், தடுமாற வேண்டிய சூழல் நிலவியதையும் மறுக்க முடியாது.

இந்நிலையில் மேலும் சில ஆட்டக்காரர்களை இப்போதே ஒப்பந்தம் செய்வது சிறந்த முடிவாக இருக்குமென டெங் ஹெக் குறிப்பிட்டுள்ளார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset