நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஓஷி ரியூ கராத்தே போட்டி: அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் தளமாகும்: இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி பெருமிதம் 

கோலால்ம்பூர்: 

கராத்தே போட்டியில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் கட்டொழுங்கு அவசியமாகும். இதனால் அவர்கள் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் மேம்பாடு அடைய முடியும். 

அவ்வகையில், இந்த ஓஷி ரியூ கராத்தே போட்டியானது அடுத்த தலைமுறைகள் கொண்ட விளையாட்டாளரை உருவாக்குவதாக இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் பெருமிதத்துடன் கூறி போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். 

கடந்த அக்டோபர் 12, 13ஆம் தேதிகளில் நடைபெற்ற ஓஷி ரியூ கராத்தே போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது தலைநகர் செத்தியாவங்சாவில் உள்ள ஶ்ரீ இஸ்கண்டார் மண்டபத்தில் நடைபெற்றது 

நாடு தழுவிய அளவில் மாணவர்கள் இப்போட்டியில் பங்கெடுத்துள்ள நிலையில் 5 வயது முதல் இளைஞர்கள் வரை இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த ஓஷி கராத்தே சங்கமானது கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 300 மாணவர்கள் சங்கத்தின் கீழ் கராத்தே பயிற்சியை மேற்கொண்டு வருவதாக ஓஷி ரியூ கராத்தே சங்கத்தின் தலைவர் அமரேசன் கூறினார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset