நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி

பாரிஸ்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணியினர்  வெற்றி பெற்றனர்.

கிங் பாவ்டோய்ன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் பெல்ஜியம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் அணியின் இரு வெற்றி கோல்களை ராண்டோல் கோலோ முவானி அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இத்தாலி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் இஸ்ரேல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் வேல்ஸ், சுவீடன், துருக்கி, ஹங்கேரி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset