நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆர்க்டிக் பொது பூப்பந்து: பெர்லி தான் - எம்.தினா இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்

பெட்டாலிங் ஜெயா: 

ஆர்க்டிக் பொது பூப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தேசிய மகளிர் இரட்டையர்களான பெர்லி தான் - எம்.தினா இணை சீனாவின் Liu Shengshu-Tan Ning இணையிடம் தோல்வியடைந்தனர்.

பின்லாந்தின் வந்தாவில் அமைந்துள்ள  Energia Arena-வில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெர்லி தான் - எம்.தினா இணை 12-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில்  சீன இணையிடம் வீழ்ந்தது. 

இதன்  மூலம் தேசிய மகளிர் இணைக்கு வெள்ளிப் பதக்கமே சொந்தமானது.

ஜனவரியில் மலேசியப் பொது பூப்பந்து போட்டி, இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி, ஜப்பான் பொது பூப்பந்து போட்டி ஆகிய பட்டங்களை  சீனாவின் Liu Shengshu-Tan Ning இணை தற்போது ஆர்க்டிக் பொது பூப்பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை தங்கள் வசமாக்கினர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset