நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோவின் சாதனையை சமநிலை செய்த லியோனல் மெஸ்ஸி

போனஸ் அயர்ஸ்:

கால்பந்துப் போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை லியோனல் மெஸ்ஸி சமநிலை செய்துள்ளார்.

2026 உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி பொலிவியாவுடன் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (19, 84, 86) ஹாட்ரிக் கோல் அடித்தார். 

இது அவரது 10ஆவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 கோல்கள் மட்டுமில்லாமல் 2 கோல்கள் அடிக்கவும் மெஸ்ஸி உதவியது குறிப்பிடத்தக்கது.

இதனால் அரங்கில் மெஸ்ஸி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.

இதன் மூலம் போர்த்துகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 10ஆவது ஹாட்ரிக்கை சமநிலை செய்துள்ளார். 
 
37 வயதாகும் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு 189 போட்டிகளில் 112 கோல்கள் அடித்துள்ளார். 

சீனியர் அணியில் 2006இல் தனது முதல் கோலை குரோஷியா அணிக்கு எதிராக அடித்தார்.

இதனிடையே நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போது மகிழ்ச்சியான ஒன்று. என்னுடைய பெயரை மக்கள் உச்சரிக்கும்போது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். 

அர்ஜெண்டினாவில் விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமானது. மக்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வதில் அணியினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

எனது ஓய்வு குறித்து நான் எதுவும் திட்டமிடவில்லை. நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன் அவ்வளவே என்று லியோனல் மெஸ்ஸி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset