நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக கால்பந்து மன்னன் டியாகோ மாரடோனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நட்புமுறையிலான கால்பந்து போட்டி

ஈப்போ: 

மறைந்த உலக கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவின் 64 ஆவது பிறந்தநாள் இம் மாதம் 30ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரேசில், அர்ஜென்டினாவிற்கான வெட்ரன் கால்பந்து விளையாட்டை ஜிக்கோ மாரடோனா கிளப்பின் தலைவர் அப்பளசாமி இராமன் பேராக் சீன விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

ஐந்தாவது ஆண்டாக இந்த கால்பந்து போட்டியை ஏற்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜிக்கோ மாரடோனா கிளப் விளையாட்டாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். 

இந்த நட்புமுறையிலான காற்பந்து போட்டியின் வாயிலாக அனைவரும் ஒன்றிணைவதற்கு வாய்ப்பாக இருந்து வருகிறது. 

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டாளர்களுக்கு ஜேர்சி, சிலுவார், காலுரை இலவசமாக வழங்கப்பட்டதாக ஜிக்கோ அப்பளசாமி கூறினார்.

இந்த நட்புமுறையிலான விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக டியாகோ மாரடோனாவிற்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதன் பின், இவ்விளையாட்டின் ஆதரவாளர்களான கே.முருகன், வி.மனோ, பா.யுவராஜன்  ஆகியோர் இவ்விளையாட்டை தொடக்கி வைத்தனர்.

இந்த ஆட்டத்தில் இறுதியாக பிரேசில் வெட்ரன் அணியினர் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் அர்ஜென்டினா அணியை தோற்கடித்தனர். 

இவ்விளையாட்டின் சிறந்த விளையாட்டாளராக கோலாலம்பூரின் ஹரி தேர்வு செய்யப்பட்டார். பிரேசில் குழுவின் சிறந்த விளையாட்டாளராக ஆசிரியர் புகழேந்தியும், அர்ஜென்டினா குழுவின் சிறந்த விளையாட்டாளராக டாக்டர் வின்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

நிறைவு விழாவில், விளையாட்டாளர்கள் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. அத்துடன், வெற்றியாளர்களுக்கு கிண்ணம், பரிசுகள் வழங்கப்பட்டன. 

இவ்விளையாட்டின் முதன்மை ஆதரவாளர்களான தெலுக் இந்தான் டிப்வின் சப்ராஸ் பூத்தேக், பினாங்கின் வரிசான் மாஜு குளோபல், கிள்ளான் " ஹாவிகன் லோஜிஸ்டிக்", வீ.எஸ்.லோஜிஸ்டிக் சீப்பிங், சுங்கை சிப்புட் பிரவிணா எண்டர்பிரைஸ், ஜிக்கோ மாரடோனா கிளப் விளையாட்டாளர்களுக்கு ஏற்பாட்டுக்குழு தலைவர் இரா.அப்பளசாமி் நாயுடு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset