நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தோமஸ் துஷல் பொறுப்பேற்பு

லண்டன்: 

பிரபல ஜெர்மானிய பயிற்சியாளர் தோமஸ் துஷல் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அணியின் அண்மை நிலைக் குறைகள் மற்றும் எதிர்கால சவால்களைச் சமாளிக்கும் வகையில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துஷல் முன்னதாக PSG, செல்சி ஆகிய கிளப்புகளில் முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்தவர்.

2021-ஆம் ஆண்டு செல்சியை UEFA சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளராக மாற்றிய அவரது திறமை, இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

தேசிய அணியின் நிர்வாகத்தில் மாற்றங்கள் தேவைப்படும் கட்டத்தில் துஷலின் அனுபவமும் நடைமுறைக் கணக்குகளும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FA நிர்வாகத்தினர், துஷல் தனது புரட்சிகர அணுகுமுறைகளால் இங்கிலாந்து அணியை புதிய உச்சிக்குக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவரது பயிற்சியில், இளம் வீரர்களுக்கு அதிக அவகாசம் கிடைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துஷல் தனது நியமனத்தை அடுத்து:

“இங்கிலாந்து போன்ற பிரம்மாண்ட அணியை வழிநடத்துவதில் பெருமைடைகிறேன். வரவிருக்கும் போட்டிகளில் அணி உறுதியுடன் விளையாடி ரசிகர்களின் நம்பிக்கையை வெல்லும்,” என்று கருத்து தெரிவித்தார்.

துஷலின் தலைமையில் இங்கிலாந்து அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset