நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம் 

கோலாலம்பூர்:

நாட்டில் கடந்த பத்தாண்டில் 1,600க்கும் அதிகமான போலிஸ் துறை அதிகாரிகள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் புக்கிட் அமான் நேர்மை, தரக்கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அஸ்ரி அகமது அந்த விவரத்தை வெளியிட்டார்.

2014ஆம் ஆண்டுமுதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை பதினையாயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் மீது பல்வேறு காரணங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

40,000துக்கும் அதிகமான காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

சராசரியாக ஒருநேரத்தில் 10,000 முதல் 20,000 அதிகாரிகள் வரை நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாகத் திரு அஸ்ரி குறிப்பிட்டார்.

பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் கூடுதலாகக் கவனிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த பத்தாண்டில் காவல்துறையினர் குறித்துச் சுமார் 50,000 புகார்கள் வந்திருப்பதாக அஸ்ரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset