நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய வணிகப் பரிமாற்ற அமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசிய வணிகப் பரிமாற்ற அமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

தற்போது அரசு ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலுக்கு எதிராக போராடவும், அதிக மதிப்புள்ள முதலீடுகளில் கவனம் செலுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், அதிகளவிலான மக்களுக்கு அதிக வருமானம் தரும் வேலைகளை உருவாக்கித் தந்துள்ளன. 

நாடு தொடர்ந்து சிறந்த அடைநிலையைப் பதிவு செய்துள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5.9 சதவீத விகிதத்துடன் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

அமெரிக்க டாலர் உட்பட மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் சமீபத்திய மீட்சியும், இந்த ஆண்டு FBM KLCI இன் விரைவான உயர்வும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset