நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மத்திய அரசின் விருதுகள் திரும்பப் பெறப்படும்: சுல்தான் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபடுபட்டால் அவர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட மத்திய அரசின் விருதுகள், பதக்கங்கள், கௌரப்பட்டங்கள் உட்பட அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பேரரசரின் அதிகாரப்பூர்வப் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள், பதக்கங்கள்,  கௌரவப் பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் போது சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிற்கு சேவை செய்துள்ளதைக் கௌரவிக்கும் வைக்கும் மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், விருது பெற்றவர்கள் நேர்மையாகவும், அரசாங்கத்திற்கு நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டு அவர்கள் ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விருது பெறுநர் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது குற்றம் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டாலோ அவருக்கு வழங்கப்பட்ட விருது மீண்டும் திரும்பப் பெறப்படும்.

மேலும், இதற்கு முன் குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு நாட்டின் சிறையில் இருக்கும் விருது பெற்றவரின் விருதுகள், பதக்கங்கள், கௌரப்பட்டங்கள் உட்பட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு அரசுக்குத் தாம் உத்தரவிட்டுள்ளதையும் சுல்தான் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார். 

இது மத்திய அரசின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

மாறாக, மாநில அரசு வழங்கும் விருதுகளில் தனது தலையீடு இருக்காது என்றும் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset