நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்

புக்கிட் மெர்தாஜாம்:

தங்கம், ஐபோன் விற்பனை மோசடி குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்துள்ளனர்.

தங்கம், ஐபோன் 15 புரோ மேக்ஸ் கைத்தொலைபேசி விற்பனையில் மோசடி செய்ததாக  மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களின் மோசடி விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

24 வயதான பிரிண்டா பிரியா, 25 வயதுடைய அனேதா யுவாரி ஆகியோர் பிப்ரவரி, கடந்த மாத தொடக்கத்தில் நடந்த குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முஹம்மத் ஹரித் முஹம்மத் மஸ்லான் முன் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம். 

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் அனிஸ் சுஹாதா ரோஸ்லி கையாண்டார்.

நீதிமன்றம் அவரை தலா 6,000 ரிங்கிட் ஜமினில் விடுவிக்க அனுமதித்தது.

ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான  தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

- பார்த்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset