நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்ணதாசன், வைரமுத்து போன்றோருக்கு விழா எடுப்பதை விட நம்நாட்டு தலைவர்களையும் சான்றோர்களையும் நினைவு கூர்வோம்: மணிமாறன்

ஈப்போ: 

நம் நாட்டு தலைவர்கள், சான்றோர்களுக்கு விழா எடுப்பதில் முன்னுரிமை வழங்குவோம். மண்ணின் மைந்தர்களை ஓரங்கட்டி விட்டு இந்திய நாட்டு தலைவர்களுக்கும், சான்றோர்களுக்கும் விழா எடுக்கும் பண்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று துன் வீ தி சம்பந்தனின் 105 வது பிறந்தநாள் விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான கி.மணிமாறன் கூறினார்.

கம்பன், கண்ணதாசன், வைரமுத்து போன்றோருக்கு விழா எடுப்பதை விட
நம் மலேசிய நாட்டில் நம் இன மக்களுக்கு சேவையாற்றி மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்க நம்மில் பலருக்கு மனமில்லை. 

நம்முடைய சிறந்த இந்திய தலைவர்களை நாளுக்கு நாள் மறந்துக்கொண்டே போகிறோம். டான்ஸ்ரீமாணிக்கவாசகர் உட்பட பலரை மறந்து விட்டனர்.

டான் ஶ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஆதி. நாகப்பன், டத்தோ பத்மநாபன், டான்ஸ்ரீ சுப்ரா, பட்டு, டேவிட் போன்ற தலைவர்களுக்கு விழா எடுப்பதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற பல சிறந்த தலைவர்களை நாம் மறந்து விட்டோம். இப்படி மறந்துக்கொண்டே போனால் காலப்போக்கில் நமது சந்ததியினருக்கு நமது வரலாறும் இந்திய சமூக தலைவர்களும் தெரியாமல் போய்விடுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில்தான் இந்நாட்டின் இந்திய சமூக சுதந்திர தந்தையான துன் வீ தி சம்பந்தனின் பிறந்தநாளை பள்ளி மாணவர்களின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். 

இவ்வாறு செய்வதனால் துன் பற்றிய வரலாறு, இந்நாட்டு இந்திய சமூகத்திற்கு அவர் செய்த மகத்தான சேவைகளை அம்மாணவர்கள் அறிவதோடு, அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும் என்ற உன்னத நோக்கதிற்காக செய்யப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.

ஆகவே, இந்நாட்டு தலைவர்கள், சான்றோர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள், இயக்கங்கள் நன்றி உணர்வோடு அவர்களது தலைவர்களை நினைவுகூர்வது மிகவும் அவசியமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset